எங்களைப் பற்றி
நாங்கள் என்ன செய்கிறோம்:-
“குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் வண்ணமயமான கற்பனைத் திறனை வளர்த்தும், தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட STEAM விளையாட்டுத் தொகுதிகளில் பல்வேறு வயதுடைய குழந்தைகளை ஈடுபடுத்துகிறோம். இதன் மூலம் தேவையற்ற மற்ற திரை நேரத்தைக் குறைத்து, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் வடிவமைக்கிறோம்.”
நாங்கள் ஏன்:-
“ஓவியம் மற்றும் படைப்பாற்றல் குழந்தைகளிடம் கற்பனை மற்றும் மகிழ்ச்சியின் அழகான எல்லையை உருவாக்குவது நிரூபிக்கப்பட்ட உண்மை. உங்கள் குடும்பத்தினரிடமும் அன்புக்குரியவர்களிடமும் மகிழ்ச்சியின் பொன்னான தருணங்களை உருவாக்குவதை எங்கள் நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம், குழந்தைகளுள் படைப்பாற்றல் தீயை மூட்டுவதற்குத் தேவையான எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய, துடிப்பான ஊக்கியாகச் செயல்படும் “Happtons” என்ற வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஈடுபாட்டு ஸ்டூடியோவை உங்களுக்கு வழங்குகிறோம். இது தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு STEAM அடிப்படையிலான விளையாட்டுத் தொகுதிகள் மற்றும் காகித நீர் வண்ணங்கள் எனும் பிரத்யேகத் தயாரிப்புடன் குழந்தைகளை ஈடுபடுத்துகிறது.”
நாங்கள் யார்:-
“மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை உருவாக்குவதை நம்பும் “Happtons”, எங்கள் வடிவமைக்கப்பட்ட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய குழந்தைகளுக்கான ஈடுபாட்டு ஸ்டூடியோ, துடிப்பான Joy box-ஐப் பயன்படுத்தி கலை மற்றும் கைவினைப் பொருட்களைச் செய்வதில் குழந்தைகளிடம் உள்ள ஆர்வத்தைத் தூண்டி, மகிழ்ச்சியான நேரத்தை ஆராயவும், கண்டறியவும், அனுபவப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் எங்கள் பிராண்டின் சாரத்தை போற்றி, மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளை உருவாக்குகிறது.”
எங்கள் நிறுவனர்:-
பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல் மிக்க ஆளுமையான எங்கள் நிறுவனர் - திரு. ருஷாங் ஷா, கனடாவில் தனது முதுகலை பட்டயப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு மாறுபட்ட துறைகளில் பல ஆண்டுகால அனுபவத்தின் மூலம், குழந்தைகள் பயனுள்ளவற்றில் செலவிடும் நேரத்தை ஆய்வு செய்து, பல மதிப்பீடுகளுக்குப் பிறகு, மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளைப் பரப்புவதற்கான இலக்குடன் இந்த பிராண்டைத் தொடங்கினார்.
பொறியாளர் என்ற தொழிலில் இருந்து தொழில்முனைவோராக மாறிய அவர், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் குழந்தைகளுடன் இணைந்து, ஓவியம்-கட்டுதல்-கற்றல்-விளையாடுதல் அமர்வுகளின் மகிழ்ச்சியில் குழந்தைகளுடன் உரையாடவும், நேரம் செலவிடவும் ஈடுபடுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த படைப்பாற்றல் வளர்ச்சிக்கு Happtons-ன் கருத்தை ஒரு வலிமையான பிராண்டாக வடிவமைத்துள்ளார்.